பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

'ஓஷோவை விட தனித்துவமானவர் ரஜினி..’: பிரபல இயக்குநர்

ஒஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Published On :

ஒஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் ரஜினி சார், நான் கேட்டதிலேயே சிறந்த பேச்சு உங்களுடையதுதான். என்னைப் பொறுத்துவரை  நீங்கள் ஓஷோவை விட தனித்தன்மை வாய்ந்தவர். உங்களின் பேச்சு புல்லரிக்க வைக்கிறது. அனைவராலும் இப்படி தங்கள் பேச்சால் புல்லரிக்க வைக்க முடியாது. விரைவில் இன்ஸ்டாகிராமுக்குள் நுழைந்து உங்களுக்கு தோன்றுவதைப் பேசுங்கள். நீங்கள் ஏ.பி.சி.டி. எனச் சொன்னாலும் அது தாளம் போலத்தான் இருக்கும். உங்கள் பேச்சைக் கேட்க மில்லியன், பில்லியன் ரசிகர்கள் காத்திருக்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.