நடிகர் அஜித்தின் அடுத்த பைக் டூர் எப்போது? மேலாளர் தகவல்

நடிகர் அஜித் குமாரின் அடுத்த பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித்தின் அடுத்த பைக் டூர் எப்போது? மேலாளர் தகவல்

நடிகர் அஜித் குமாரின் அடுத்த பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

கார் பந்தயம், பைக் சுற்றுப் பயணம், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்டவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். அவர் பைக்கில் செல்லும் காட்சிகள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.

உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்லும் பயணத்தை அஜித் கடந்தாண்டு தொடங்கினார். தமிழகத்தின் வெள்ளக்கோவிலில் இருந்து புறப்பட்ட அஜித், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், பூடான் மற்றும் நேபாள நாடுகளிலும் பைக்கில் சுற்றிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

ஏற்கெனவே, ஐரோப்பா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சில பகுதிகளில் நடிகர் அஜித் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேணி இயக்கத்தில் உருவாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், உலகம் சுற்றும் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ளார் அஜித்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட பைக் சுற்றுப்பயணம் வருகின்ற நவம்பர் மாதம் மீண்டும் துவங்கும் என்று சுரேஷ் சந்திரா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com