கயல், எதிர்நீச்சல் தொடர் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற நாயகிகளுக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விளம்பரங்களிலும் அவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களாகவே தோன்றியுள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் எதிர்நீச்சல் - கயல் ஆகிய இரு தொடர்களும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இதில் நாயகியாக நடிக்கும் நாயகிகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 7.30 மணிக்கு கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஜா ராணி தொடரில் புகழ் பெற்ற சஞ்சீவ் நடித்து வருகிறார்.
இதேபோன்று வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் நடிகை மதுமிதா (ஜனனி) நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் சபரி (சக்தி) நடித்து வருகிறார். எதிர்நீச்சல் தொடரில் சக்தி - ஜனனி இணைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்த இரு தொடர்களிடையேயும் டிஆர்பி பட்டியலில் முதலிடத்திற்கு போட்டி உண்டு. அவ்வபோது முதல் இரண்டு இடங்களையும் கயல் - எதிர்நீச்சல் தொடரே பெறுகின்றன. இந்த இரு தொடர்கள் பெறும் அளவுக்கு டிஆர்பி புள்ளிகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வேறு எந்த தொடர்களும் பெறவில்லை.

இந்த இரு தொடர்களில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி - மதுமிதா ஆகிய இருவரும், இந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பால் விளம்பரத்திலும் நடித்துள்ளனர்.
அந்த விளம்பர காட்சிகளை வைத்து சைத்ரா - மதுமிதா ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



