கணேஷ் வெங்கட்ராமன்
கணேஷ் வெங்கட்ராமன்

சின்னத்திரையில் களமிறங்கும் கணேஷ் வெங்கட்ராமன்!

சின்னத்திரையில் பிரபல தமிழ் சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பிரபல தமிழ் சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். தொடர்ந்து, உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார்.

சின்னத்திரைத் தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணன் என்பவரை கனேஷ் வெங்கட்ராமன் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில்,  கணேஷ் வெங்கட்ராமன் ஜி தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நினைத்தேன் வந்தாய் தொடரில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக சமூக ஊடங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நினைத்தேன் வந்தாய் தொடரின் ப்ரோமோ விடியோ வெளியானவுடன், கணேஷ் வெங்கட்ராமன் இத்தொடரில் நடிப்பது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com