தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.
அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்த இயக்குநரின் ‘அனிமல்’ படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.
இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய்.
ஹைதராபாத்தில் நேற்று நடந்த அனிமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு, ரன்பீர், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரமாண்டமான நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள்.
இதையும் படிக்க: காந்தாரா வெற்றிக்குப் பிறகு கூடுதலாக உழைக்கிறேன்: ரிஷப் ஷெட்டி
இந்த நிகழ்ச்சி குறித்து ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில், “எனக்கான ஃபிரேம் இதுதான். எனக்காக இந்த தருணத்தை படம் பிடித்தவர்களுக்கு மிக்க நன்றி. அன்பு, மரியாதை, வெதுவெதுப்பான சூழல், பைத்தியம், பதட்டம் என எல்லாமே நிறைந்திருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அற்புதமான தருணமாக அமைந்தது. இந்த எல்லையில்லா அன்புக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நேற்றைய நாளுக்காக அனைவருக்கும் நன்றி. அனிமல் இன்னும் 3 நாள்களில் வரவிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.