லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரம், டிரைலரில் விஜய் பேசிய தகாத வார்த்தையும் சர்ச்சையானது. இந்நிலையில், யூடியூபில் வெளியான டிரைலரில் குறிப்பிட்ட அந்த வார்த்தையை ஓசையில்லாமல் (மியூட்) செய்துள்ளனர்.
இதையும் படிக்க: சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நயன்தாரா?
மேலும், தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், லியோ படத்தினை அதிகாலைக் காட்சிகளில் வெளியிட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், அக்.19 அதிகாலை 4 மணிக் காட்சிக்கும் அக்.19 - அக்.24 ஆம் தேதி வரை காலை 7 மணிக் காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருநாளுக்கு 5 காட்சிகள் வரை திரையிடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

