ரூ.300 கோடி பட்ஜெட் கேமரா - அசத்தும் யூடியூபர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர்கள் ரெட் கேமராவில் தங்களின் விடியோக்களை எடுத்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ரூ.300 கோடி பட்ஜெட் கேமரா - அசத்தும் யூடியூபர்கள்!

யூடியூப்பில் பலரும் தங்களின் திறமைகளை, ஆர்வத்தை விடியோவாக எடுத்து பதிவேற்றி வருகின்றனர். இதனால், புகழ் வெளிச்சம் கிடைப்பதுடன் மிகப்பெரிய வருவாயை ஈட்டும் தொழிலாகவும் யூடியூப் தளம் இருக்கிறது. கரோனா காலத்தில் தங்களுக்கான யூடியூப் சேனல்களை ஆரம்பித்து சமையல், வாழ்க்கை முறைகள், மருத்துவம், நகைச்சுவை என பல துறைகளில் களமிறங்கி தொடர்ந்து செயல்பட்டு வந்தவர்கள் இன்று பிரபலங்களாக உள்ளனர்.

தமிழகத்திலும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பல சமையல் கலைஞர்கள் விதவிதமாக, பிரம்மாண்டமாக சமைத்து தன் சந்தாதாரர்களை லட்ச கணக்கில் அதிகப்படுத்தியுள்ளனர். அவர்களில், முதன்மையானவர்களாக வில்லேஜ் குக்கிங் சேனலை நடத்தும் குழுவினர் அறியப்படுகின்றனர்.  ‘ஆல்வேஸ் வெல்கம்’ எனத் தொடங்கும் இவர்களின் சமையல் விடியோக்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். 2.27 கோடி சந்தாதாரர்களை வைத்திருப்பதால் அதிக வருவாயையும் ஈட்டி வருகின்றனர். 

இதையும் படிக்க: வெளியானது மத்தகம் - 2

விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற இவர்கள், ராகுல் காந்தி கலந்துகொண்ட சமையல் விடியோ ஒன்றையும் வெளியிட்டனர். 6 கோடிப் பார்வைகளைக் கடந்த அந்த விடியோ இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், லியோவுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் இணைய வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த இந்த யூடியூபர்கள், புதிதாக வாங்கிய கேமராவை லோகேஷிடம் காட்டினர். இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட லோகேஷ் கனகராஜ், ‘எனக்குத் தெரிந்து ரெட் ராப்டர் வகை கேமராவில் விடியோ எடுக்கும் ஒரே யூடியூபர்கள் நீங்களாகத்தான் இருக்கும்’ என்றார். 

உலகளவில் பல கோடி பட்ஜெட்களில் தயாராகி வரும் திரைப்படங்கள் ரெட் கேமரா ஒளிப்பதிவில்தான் உருவாகி வருகின்றன.

வில்லேஜ் குக்கிங் குழுவினர் வைத்திருந்த ரூ.34 லட்ச மதிப்பிலான ரெட் ராப்டர் வகை கேமராவின் அடுத்த மாடலான ரெட் வி - ராப்டர் எக்ஸ்எல் கேமராவைத்தான் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்ஸா, ரூ.300 கோடியில் உருவான லியோ படத்திற்கு பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com