புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குஷி பட வெற்றி: யாதாத்ரி கோயிலில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா வழிபாடு

‘குஷி’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார்.  

News image
Updated On :3 செப்டம்பர் 2023, 1:10 pm

DIN

‘குஷி’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். 
விஜய் தேவரகொண்டா- சமந்த நடிப்பில் கடந்த 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குஷி. மேலும் படத்தில் ஜெயராம், ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷிவ நிர்வாணா இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். 
படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பும் தமிழில் கலவையான விமர்சனமும் கிடைத்துள்ளது. இருப்பினும் படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. குஷி திரைப்படம் வெளியான 2 நாள்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
இந்த நிலையில் ‘குஷி’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இன்று வழிபட்டார். அப்போது முழு பாரம்பரிய உடையில் அவர் இருந்தார். இப்புகைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.