வெளியீட்டிற்கு முன்னரே மாபெரும் சாதனை படைத்த லியோ!

இங்கிலாந்தில் நடிகர் விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.
வெளியீட்டிற்கு முன்னரே மாபெரும் சாதனை படைத்த லியோ!

இங்கிலாந்தில் நடிகர் விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

இதனை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த "வாரிசு", திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் "லியோ" திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை  படைத்துள்ளது.

முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நடிகர் விஜய்யின் "பீஸ்ட்"  திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. பீஸ்ட் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் அதிக வசூலையும் பெற்றது. இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட "வாரிசு" அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் நடிகர் விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

வெளிநாட்டு தமிழ் திரைப்பட விநியோகத்தில் புகழ்பெற்ற நிறுவனமான, அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுடன் புதுமையான அணுகுமுறையில் "பீஸ்ட்", "வாரிசு", "மாமன்னன்", "போர் தொழில்", "கோப்ரா", உட்பட பல படங்கள் பிரமாண்ட சாதனைகள் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com