அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் செப்.7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உள்ளது. படக்குழு 4வது நாள் முடிவில் ரூ. 520.79 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜவான் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் தமிழுக்கும் ஹிந்திகும் வித்தியாசம் இருக்கிறது. தமிழில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்திருப்பார். ஹிந்தியில் இவருக்கு பதிலாக முகேஷ் சப்ரா நடித்திருக்கிறார்.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா?

ஜவான் பரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற யோகிபாபு ஹிந்தி ஜவானில் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்தியில் யோகி பாபு கதாபாத்திரத்தில் நடித்தவர்.
தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் யோகிபாபு நடித்த காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டது. அதனால் எனது அனைத்து படங்களிலும் யோகிபாபு இருக்க வேண்டுமென அட்லி கூறியதாக யோகிபாபு மேடையில் கூறினார். அதனால் கதை கேட்காமலே ஜவானில் நடித்ததாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ஜிப்மரில் இளைஞரின் உறுப்புகள் தானம்

ரோஹிணி: ஹோட்டல் சமையலறையில் தீ விபத்து

கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

ஆதிதிராவிடா், குலாலா் மயானத்துக்கு சாலை அமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



