மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

குழந்தைகளின் தொழில்நுட்ப அறிவு வியக்கவைக்கிறது : ஹிப்ஹாப் ஆதி

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இக்காலத்து குழந்தைகளின் தொழில்நுட்ப திறன் வியக்க வைக்கும்படி உள்ளதாக கூறியுள்ளார்.  

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 12:35 pm

தனி இசைக் கலைஞராக இருந்த ஹிப்ஹாப் ஆதி பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 

ஹிப்ஹாப் ஆதியின் 6வது படமாக வீரன் ஜூன் மாதம் வெளியாகியது. சூப்பர் ஹீரோ படமான வீரன் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றன. தற்போது இந்தப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்க கிடைக்கிறது. 

Story image

ஹிப்ஹாப் ஆதி தனது 7வது படம் பற்றிய அறிவிப்பை கடந்தாண்டு வெளியிட்டார்கள். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், படப்பிடிப்பின்போது பள்ளிக் குழந்தைகளுடன் ஹிப்ஹாப் ஆதி பேசியுள்ளார். விடியோ எடுத்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பகிர்ந்து, “நான் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்வேன் அப்போதுதான் அவர்களது பெற்றோர்களது செல்போன்களில் இருந்து எடுக்க முடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இக்காலத்து குழந்தைகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சிறப்பாக இருக்கிறார்கள். அதை அவர்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்பது நம்மிடம்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.