
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: 970 திரைகளில் மாஸ் ரிலீஸாகும் துணிவு!
இந்தப் படத்தின் டீசர் கடந்த 2019இல் வெளியான நிலையில் 3 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு ‘பனித்துளி’ எனும் பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை கபிலன் எழுதியுள்ளார். சின்மயி, சி.சத்யா, யாழின் நாசர் பாடியுள்ளனர்.