ஒரே வாழ்க்கைதான்! தனியாகப் பயணம் சென்ற சீரியல் நடிகை!!

மதுரை மக்களின் அன்பும் மரியாதையையும் கண்டு வியப்பதாக நடிகை அனுஷா புகழாரம் சூட்டியுள்ளார். 
ஒரே வாழ்க்கைதான்! தனியாகப் பயணம் சென்ற சீரியல் நடிகை!!
Published on
Updated on
2 min read

நடிகைகள் பலரும் இளைப்பாறுதலுக்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்ல, நடிகை அனுஷா மட்டும் மதுரைக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். 

மதுரை மக்களின் அன்பும் மரியாதையையும் கண்டு வியப்பதாக நடிகை அனுஷா புகழாரம் சூட்டியுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிகை அனுஷா நடித்து வருகிறார். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். 

கன்னட மொழி தொலைக்காட்சித் தொடரான ​​ராதா ரமணாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஆனந்த ராகம் தொடரில் நடித்து வருகிறார். 

நடிகையாக இருந்தாலும் பண்பாட்டு பாரம்பரியங்களை கடைபிடிப்பவராகவே அனுஷா இருந்து வருகிறார். அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவும் படங்களும் அது தொடர்பாகவே இருக்கும்.

இந்நிலையில் மதுரைக்கு அவர் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அனுஷா, அங்கு மக்களோடு மக்களாக கடைவீதிகளில் தனது நாளைக் கழித்துள்ளார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்ததை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

மதுரையில் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளையும் தனது விடியோவில் குறிப்பிட்டு மதுரை மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 

அதோடு, தனிமையாக பயணம் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் பாடங்களும் மிகவும் வியப்புக்குரியது. வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுக்காக வாழுங்கள். ஒரே ஒருவாழ்க்கைதான். எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com