லியோ வசூல்: தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியான லியோ, முதல் நாளில் அதிகமான வசூலிட்டிய இந்தியப்படமாக லியோ இருக்கிறது.
இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.
லியோ திரைப்படம் 6 நாள்களில் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்பட்டு வந்தன. மேலும், அமெரிக்காவில் அதிக வசூலைக் குவித்த இந்தியப்படம் இதுதான் என்றும் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வ வசூல் விவரத்தினை அறிவித்துள்ளது. 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ரத்னகுமார், “அவர் நம்பர்.1 என எங்கும் கூறவில்லை. யார் வேண்டுமானாலும் நம்பர்.1 ஆகலாம் என நிரூபித்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...