திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வணங்கான் - நம்பிக்கையில் அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 10:15 am

DIN

நடிகர் சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பின் இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

படத்தின் படப்பிடிப்பும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. ஆனால், பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.

சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து, இப்படத்தின் நாயகனாக அருண் விஜய்யும் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடித்து வருகின்றனர்.

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாள்களில் முடிய உள்ளதால் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும், இப்படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வந்தது. 

இந்நிலையில், ’கங்காரு’, ‘மாநாடு’, ‘ஜீவி - 2’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி இப்படத்தின் தயாரிப்பு உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் சாதாரண மீனவர் தோற்றத்தில் நடித்திருக்கும் அருண் விஜய் இப்படத்தை பெரிதும் நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.