
பாண்டவர் இல்லம் தொடரின் நாயகி இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்களும் அவரின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாடலிங் துறையில் நுழைந்த பாப்ரி கோஷ், தற்போது சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வந்தாலும் ஓய்வு நேரங்களை உடற் பயிற்சி நிலையத்திலேயே செலவிட்டு வருகிறார்.
சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய பாப்ரி, உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இந்த ஆண்டு தனது பிறந்தநாளை உடற்பயிற்சி நிலையத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான விடியோவை நடிகை பாப்ரி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சொகுசு விடுதியில், நீச்சல் குளத்தில், கடற்கரையில் ஏற்பாடு செய்து பிறந்தநாள் கொண்டாடும் பல நடிகைகளுக்கு மத்தியில் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த உடையிலேயே கேக் வெட்டி அதனை விடியோ பதிவும் செய்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரில் நாயகியாக நடித்தவர் நடிகை பாப்ரி கோஷ். கொல்கத்தாவில் பிறந்த இவர், பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பைரவா, சர்கார், விஸ்வாசம் உள்ளிட்ட 10 படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சித்தி -2, பூவே உனக்காக, அருவி, கண்ணெதிரே தோன்றினால், நாயகி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடரில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.