நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை யாமி கௌதம் நடிப்பில் வெளியான ஆர்டிகள் 370 படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 5:30 pm IST

ஹிமாசலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

தமிழில் 2013இல் கௌரம் எனும் படத்திலும் 2016இல் ஜெய் உடன் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து இதில் நடித்துள்ளார்கள்.

பாஜக அரசுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவே இந்தப் படம் உருவாக்கப்பட்டதாக சர்சை எழுந்தது. பின்னர் இயக்குநர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆர்டிகள் 370 திரைப்படம் கடந்த பிப்.23ஆம் தேதி வெளியாகியது. இந்தப் படத்தினை தயாரித்தது யாமி கௌதமின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story image

இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதில் யாமி கௌதமின் சண்டைக் காட்சிகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாளை (ஏப்.19) நெட்பிளிக்ஸில் ஓடிடியில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.