நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

நடிகர் சல்மான் கான் நடிக்கவிருக்கும் சிக்கந்தர் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 1:22 pm IST

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினையே பெற்றது.

அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே 23’ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து படம் இயக்குவதாக சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்தப் படத்துக்கு சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 2025 ரமலானுக்கு வெளியாகுமென போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Story image

இந்நிலையில் மே மாதம் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள்ளாக சிவகார்த்திகேயன் படத்தின் பெரும்பகுதியை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

ஜுன் மாதம் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தினை இயக்குவார். ஜூலையில் இருந்து சல்மான் கான் படத்தினை இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், ஹிந்தி என மாறி மாறி இயக்கவிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.