டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 3:43 pm

DIN

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.

இப்பாடல் குறித்து பலரும் இணையத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை மீம்ஸ்கள் மூலமாக கிண்டல் செய்து வந்தனர். இதனிடையே யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை டீ ஆக்டிவேட் செய்தார்.

இந்நிலையில், இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியுள்ளது. விரைவில் எங்கள் குழுவினர் அதை சரிசெய்துவிடுவார்கள், உங்கள் அக்கறை கலந்த விசாரிப்புக்கு நன்றி." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.