பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

பாரதிராஜா, நட்டி இணைந்து நடிக்கும் நிறம் மாறும் உலகில்

பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், “நிறம் மாறும் உலகில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் 'நிறம் மாறும் உலகில்'. மேலும் படத்தில் சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தை Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து தயாரிக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் இரத்தம் பாயும் கரும் சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பாத்தவுடனே இதயத்தை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர்.

நான்கு கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங்க் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com