மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

பிரபல ஹாலிவுட் நடிகை ஒரு படத்துக்காக மட்டும் மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கியுள்ளதாக பிரப ஆங்கில நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த சென்டாயா தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர். 2010இல் அவர் நடித்த ஷேக் இட் அப் எனும் தொடர் 6.2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்கப்பட்டது. சிறிய வயதிலேயே உலகம் முழுவதும் பிரபலமானார் சென்டாயா.

பின்னர் 2016இல் லெமனோட் படத்தில் அறிமுகமானாலும் ஸ்பைடர் மேன் திரைப்படம்தான் அவருக்கான அடையாளமாக இருக்கிறது. கடைசியாக இவர் நடித்த டியூன் 2 திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் 184 மில்லியன் (18.4 கோடி) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!
மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

தற்போது நடிகையாக மட்டுமில்லாமல் இணைத் தயாரிப்பாளராகவும் ‘சேலஞ்சர்ஸ்' படத்தில் களமிறங்கியுள்ளார் சென்டாயா. டென்னிஸில் வியத்தகு திறமையுடைய டஷி டுன்கன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகி பயிற்சியாளர் ஆகிய ட்ஷி டுன்கன் கணவர், முன்னாள் காதலன் இவர்களுக்குள் நடக்கும் கதையே பிரதானமாக எடுக்கப்பட்டுள்ளது.

“ரொமாண்டிக் ஸ்போர்ட்ஸ் டிராமாவா உருவாகியுள்ள இது டென்னிஸ் படமல்ல; ஆனால் டென்னிஸை ஒரு கருவியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது” என 27 வயதான சென்டாயா கூறியுள்ளார்.

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!
‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

இந்தப் படத்துக்காகத்தான் நடிகை சென்டாயா 10 மில்லியன் அமெரிக்க டாலரை ( இந்திய மதிப்பில் ரூ.83 கோடி) சம்பளமாக வாங்கியுள்ளதாக பிரபல ஆங்கில இதழான வெரைட்டி தெரிவித்துள்ளது.

51 நாடுகளில் நாளை (ஏப்.26) வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் 14 நாடுகளில் மே மாதம் தொடக்கத்திலும் வெளியாகவிருக்கிறது. அமேசான் அல்லது மேக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் இந்தியாவில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் நாளை (ஏப்.26) வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com