ஆதவன் இளவயது சூர்யா தோற்றம் குறித்து தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
நடிகர் சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தில் அவரது சிறுவயது தோற்றம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான 2009-வது ஆண்டில் தொழில்நுட்ப ரீதியாக இந்த தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
சில மாறுதல்கள் தெரிந்தாலும் அசலாக சூர்யா சிறுவயதில் எப்படி இருந்திருப்பாரோ அதை தோற்றத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திரையில் கொண்டு வந்தார்.
இன்று ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரின் முகத்தை இன்னொருவரின் உடலில் துல்லியமாக வைக்கவும் குரல்களை மாற்றுவதும் 100% உண்மைத்தன்மையுடன் சாத்தியமாகியுள்ளது.
ஆனால், ஏஐ மற்றும் முழு அனிமேஷன் உதவி இல்லாமல் ஆதவன் திரைப்படத்தில் சூர்யாவின் தோற்றத்தை எப்படிக் கொண்டு வந்திருப்பார்கள்? இதுகுறித்த கேள்விக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பதிலளித்துள்ளார்.
ஆதவன் நினைவுகளைப் பகிர்ந்ததுடன், “அப்படத்தில் சிறுவயது சூர்யா கதாபாத்திரத்திற்கு அவரே நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அதற்காக, ஹாலிவுட் அனிமேஷன் நிறுவனத்திடம் பேசியபோது 2 நிமிடக் காட்சிக்கு ரூ.8 கோடி கேட்டார்கள். படத்தின் பட்ஜெட்டே ரூ.21 கோடிதான். பின், எனக்கும் தசாவதாரம் படத்தை இயக்கிய அனுபவம் இருந்ததால், இளவயதுக்கான காட்சியில் சூர்யா மற்றும் ஒரு சிறுவனையும் நடிக்க வைத்தோம். படப்பிடிப்பின்போது இருவருக்குப் பின்னாலும் கிரீன் மேட் இருக்கும்.

கிரீன் மேட் காட்சியில் சூர்யா.
நான் சிறுவனின் உடலில் சூர்யாவின் முகத்தை மட்டும் கச்சிதமாக பொருத்தினால்போதும் என இதற்கான நிறுவனத்திடம் பேசினேன். அவர்கள் அந்த முகத்தை பொருத்த ரூ.28 லட்சம் கேட்டனர். சூர்யா டப்பிங் பேச வந்தபோது, இளவயது தோற்றத்தைப் பார்த்து மிரண்டுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த இந்த அனுபவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படம் உருவானது எப்படி? இயக்குநர் H. Vinoth பேட்டி!

நடிகர் சூர்யாவின் 49-வது திரைப்பட இயக்குநர் இவரா?

சூர்யா - 47 படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை: ஜித்து மாதவன்

சூர்யா - 47 படத்தில் மோகன்லால்? இயக்குநர் பதில்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




