இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வணங்கான் - நம்பிக்கையில் படக்குழு!

வணங்கான் திரைப்படம் பேசப்படும் என்கிற நம்பிக்கையில் படக்குழு இருப்பதாகத் தகவல்.

News image
வணங்கான்
Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:13 am

DIN

வணங்கான் திரைப்படம் பேசப்படும் என்கிற நம்பிக்கையில் படக்குழு இருப்பதாகத் தகவல்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் மாதத்திற்கு மாற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Story image

இந்த நிலையில், வணங்கான் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நன்றாக வந்திருப்பதாகக் கூறியிருந்தார். மேலும், வணங்கான் திரைப்படம் பொதுவெளியில் பேசப்படும் படமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் படக்குழுவினர் இருப்பதாகத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.