தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜெயிலர் - 2 படத்தில் நெல்சன் சம்பளம் இவ்வளவா?

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காக இயக்குநர் நெல்சன் பெறவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 7:00 am

DIN

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்காக இயக்குநர் நெல்சன் பெறவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன், ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா நடிப்பில் உருவான அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இதுவும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. 

அதன்பின், நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கு நெல்சன் ஆளானார்.

தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக உருமாறியது. இப்படத்திற்கு நெல்சன் ரூ.22 கோடி சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, நெல்சன் பாலிவுட் படமொன்றை இயக்குவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என மறுப்புகளும் வெளியாகின. ஜெயிலர் படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சனை வைத்து ஜெயிலர் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக, நெல்சனுக்கு சம்பளமாக ரூ.60 கோடி வழங்க உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்தபின் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.