என் கனவு நிறைவேறியது... விக்ரமைக் கண்டு மகிழ்ந்த ரிஷப் ஷெட்டி!
நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி.


நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி.
நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் (ஆக.5) நடைபெற்றது. இதில், விக்ரம் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
தற்போது, புரோமோஷனுக்காக பல பகுதிகளுக்குச் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், காந்தாரா படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமடைந்த இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி நடிகர் விக்ரமைச் சந்தித்துள்ளார்.

நடிகர் விக்ரமுடன் ரிஷப் ஷெட்டி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு நடிகனாக என் பயணத்தில் விக்ரம் சார் எப்போதும் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். 24 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் அவரைச் சந்தித்ததும் உலகிலேயே நான்தான் அதிர்ஷ்டசாலி என்கிற உணர்வை அடைந்தேன். என் கனவு நனவானது. என்னைப்போன்ற நடிகர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கு நன்றி சியான். தங்கலான் வெற்றிபெற வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...