தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்பாதீர்: நடிகர் மோகன்லால்

எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்குதான் இருக்கிறேன், விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று நடிகர் மோகன்லால் கூறியுள்ளார்.

News image

மோகன்லால்

Updated On :31 ஆகஸ்ட் 2024, 2:43 pm IST

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்கேதான் இருக்கிறேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று மலையாள நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான மோகன்லால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் விலகினார்.

தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்துவரும் நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடிகர் மோகன்லால் செய்தியாளர்களை சந்தித்தார். மலையாள நடிகர்கள் சங்கத்திலிருந்து (அம்மா சங்கம்) மோகன்லால் விலகிய நிலையில், செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளித்தவர், மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? அனைத்துக் கேள்விகளுக்கும் அம்மா சங்கம் மட்டும் எப்படி பதில் சொல்லும் என்று கேட்டார்.

முன்னதாக அவர் பேசுகையில், நான் எங்கும் ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன். பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிபதி ஹேமா குழு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். அம்மா சங்கம் தொடர்பாக அவதூறு பரப்பாதீர்கள் என்றார்.

மேலும், பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்கள் கடமையை செய்கின்றன. பாலியல் புகாரால், மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். எனவே, மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்ப வேண்டாம். வயநாடு போன்ற பேரிடர்களின்போது தொடர்ந்து மக்களுக்கு அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம் எனவும் செய்தியாளர்களுக்கு மோகன்லால் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் உள்ள பிரச்னை தொடர்பாக நான் எப்படி பேச முடியும் என செய்தியாளரின் கேள்விக்கு மோகன்லால் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.