பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிக் பாஸ் 8: செளந்தர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ராணவ்வுடன் சண்டையிடும்போது செளந்தர்யா வரம்பு மீறி பேசும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

செளந்தர்யா

Published On :

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ராணவ்வுடன் சண்டையிடும்போது செளந்தர்யா வரம்பு மீறி பேசும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

குடைபிடித்து மழையை ரசித்தபடி இருந்த அன்ஷிதாவை வேலை செய்யுமாறு நிர்பந்திக்கும் செளந்தர்யா, அவரின் குடையைப் பிடித்து இழுக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த ராணவ், அன்ஷிதாவுக்கு ஆதரவாக செளந்தர்யாவுக்கு எதிராகப் பேசுகிறார். ராணவ்வின் பேச்சை பொருக்கமுடியாத செளந்தர்யா எல்லை மீறி ஆக்ரோஷமாகக் கத்துகிறார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. ரஞ்சித் இந்த வாரத்துக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டில் 67வது நாளான இன்றும் தொழிலாளர்கள் டாஸ்க் நடைபெற்றது.

இதில், அருண் பிரசாத், ரயான், ராணவ், சத்யா, பவித்ரா, அன்ஷிதா, ரஞ்சித் ஆகியோர் தொழிலாளர்களாக விளையாடுகின்றனர்.

இவர்களுக்கு வேலை வழங்கும் ஆலை மேலாளர்களாக செளந்தர்யா, முத்துக்குமரன், மஞ்சரி, ஜெஃப்ரி, வி.ஜே. விஷால், தீபக் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

இதில், சரியாக விளையாடாத ஒருவரை இரு அணிகளில் இருந்தும் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தவகையில் மேலாளர் அணியில் இருந்து தொழிலாளர் அணிக்கு விஜே விஷாலும், தொழிலாளர் அணியில் இருந்து மேலாளர் அணிக்கு அருண் பிரசாத்தும் மாறியுள்ளார்.

இந்நிலையில், தொழிலாளர் அணியில் இருந்த அன்ஷிதா, குடைபிடித்து மழையை ரசித்தபடி நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அதனை கவனித்த மேலாளர் செளந்தர்யா, வேலை நேரத்தில் மழையை ரசித்துக்கொண்டிருக்கிறாயா? என அவரிடம் இருந்து குடையைப் பிடுங்குகிறார்.

அப்போது அன்ஷிதாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ராணவ், தொழிலாளர் மீது கைவைப்பது அநாகரீகம் எனக் கூறுகிறார். ஓய்வு நேரத்தில்தான் மழையை ரசிப்பதாக அன்ஷிதா கூறுகிறார். ஆனால் அவரிடமிருந்து குடையை செளந்தர்யா பிடுங்குகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ராணவ்விடம் அநாகரீகமாக செளந்தர்யா பேசுகிறார்.

செளந்தர்யா

செளந்தர்யா

பிக் பாஸ் வீட்டில் சரியாக போட்டியை விளையாடாமல், அநாகரீகமாகப் பேசுவது, விதிகளை மதிக்காமல் புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விஜய் சேதுபதி இரு முறை செளந்தர்யாவை எச்சரித்துள்ளார்.

எனினும் தற்போது மூன்றாவது முறையாக ராணவ்விடம் செளந்தர்யா ஆக்ரோஷமாக நடந்துகொண்ட விடியோ வெளியாகியுள்ளது. இதனால் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி எச்சரித்து விடுவாரா? அல்லது ரெட் கார்டு போன்ற விதிகளைப் பயன்படுத்தி தக்க பாடம் புகட்டுவாரா? என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.