நடிகர் சசிகுமார் புதியதாக நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
டீசரில் சசிகுமார்-சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் அடுத்த வருடம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தற்போது நடிகராக தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
அயோத்தி, கருடன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஃபிரீடம் என்ற படம் வெளியீட்டுக்கு தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.