பொறுப்பற்ற இயக்குநர் ஷங்கர்: ராம் சரண் ரசிகர்கள் விமர்சனம்!

பொறுப்பற்ற இயக்குநர் ஷங்கர்: ராம் சரண் ரசிகர்கள் விமர்சனம்!

இயக்குநர் ஷங்கரை நடிகர் ராம் சரணின் ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள். 
Published on

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கதையை எழுதியது கார்த்திக் சுப்புராஜ் என்பது சுவாரசியமான தகவல். 

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு படம் 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 

எக்ஸில் கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட் தராததால் கடுப்பான ராம் சரணின் ரசிகர்கள் “பொறுப்பற்ற இயக்குநர் ஷங்கர்” ( irresponsible director shankar) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

படப்பிடிப்பு எப்போது முடியுமென ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com