குண்டூர் காரம் படத்தின் குறிச்சி மடதாபெட்டி பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் நாள் வெளியானது.
எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். நடிகைகள் ஸ்ரீ லீலா, மீனாக்ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
குறிச்சி மடதாபெட்டி எனும் பாடல் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இதன் லிரிக்கல் விடியோ பாடல் 100 மில்லியனுக்கும் (10 கோடி) அதிகமான பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது.
நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்நாளில் இவ்வளவு கஷ்டப்பட்டு நடனம் ஆடவில்லை எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்மா அம்மாதான் பாடல்!

நம்ம பாட்டனோட பாட்டு... வெளியானது கருப்பு படத்தின் பாடல்!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு



