/

சமந்தாவை வாழ்த்திய நயன்தாரா.. ஏன்?

நடிகை சமந்தாவை, நயன்தாரா வாழ்த்தியுள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 6:48 am

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

தற்போது, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். விரைவில், சமந்தா நடிக்கவுள்ள படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சமந்தா சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதற்காக, பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். முக்கியமாக, நடிகை நயன்தாரா, “14 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் சமந்தா.." எனப் பதிவிட்டார்.

Story image

இதனைக் கண்ட சமந்தா, “மிக்க நன்றி என் அழகே” என நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Story image

நயன் தாராவும் சமந்தாவும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.