/

சூரி நடிக்கும் கருடன் பட வெளியீடு குறித்த அப்டேட்

சூரி நடிக்கும் கருடன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2024, 1:32 pm

DIN

சூரி நடிக்கும் கருடன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. 

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன்.

இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். 

படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக தமிழகத்தில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. 

இந்த நிலையில் படம் வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.