தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சூர்யா - 43 படத்தில் ஸ்ரீதேவியின் மகள்!

சூர்யாவின் 43வது படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2024, 6:43 am

DIN

சூர்யாவின் 43வது படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தொடர்ந்து, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. 

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம்.

இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.