சொகுசு கார் வாங்கிய விஜய்.. விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சொகுசு கார் வாங்கிய விஜய்.. விலை எவ்வளவு தெரியுமா?

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது, படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், விஜய் தன் ரசிகர்களை படப்பிடிப்பு பகுதியில் சந்தித்த புகைப்படம் வைரலாகியிருந்தது. 

இதற்கிடையே, நடிகர் விஜய் அதிக டிஜிட்டல் வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ ஐ7 எக்ஸ் டிரைவ் 60 எலக்ட்ரிக் (BMW i7 xDrive 60 electric car)  சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் இந்திய விலை ரூ.2 - 2.3 கோடி வரை இருக்கலாம். இந்தியாவிலேயே மிகச்சிலரே இந்த வகைக் காரை வைத்துள்ளனர். தற்போது,  அப்பட்டியலில் விஜய்யும் இணைந்துள்ளார்.

பிஎம்டபிள்யூ ஐ7 எக்ஸ் டிரைவ் 60 எலக்ட்ரிக் (BMW i7 xDrive 60 electric car)  சொகுசு கார்
பிஎம்டபிள்யூ ஐ7 எக்ஸ் டிரைவ் 60 எலக்ட்ரிக் (BMW i7 xDrive 60 electric car)  சொகுசு கார்

ஏற்கனவே, நடிகர் விஜய்யிடம் ரூ.8 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வகை கார் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com