இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வியின் நடிப்பும் பெரிதும் ரசிக்கும் படியாக இருந்தது.
இதையும் படிக்க: ஜெர்மனியில் மகேஷ் பாபு! ராஜமௌலி படத்துக்காக பயிற்சியா?
வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “தணிக்கைக் குழு இந்தப் படத்தில் பல பெயர்களை மாற்றக் கூறினார்கள். சாதிய பிரச்னைகள் இருக்கிறது. அதனால் படம் வெளியாவதில் சிக்கல் என மாற்றுக் கருத்துடையவர்கள் கூறினார்கள். இது சமத்துவத்தை வலியுறுத்தும் படம். இதற்கும் பிரச்னைகள் கொடுக்கிறார்கள்.
இதையும் படிக்க: ஆபத்துக் கட்டத்தை தாண்டிய மயங்க் அகர்வால்!
படத்தில் ஆதிக்க சாதியுடைய ஒரு இளைஞன் அம்மா வயதில் இருப்பவரை சுசிலா எனப் பெயர் சொல்லி அழைப்பதில் இருக்கும் வலியை இயக்குநர் சிறப்பாக கடத்தியிருந்தார். காதலியிடம் சொல்லி அழும் அசோக் செல்வன் அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார். சுசிலாவை அம்மா என்று அழைக்கும் அந்தக் காட்சி மிகவும் பிடித்திருந்தது. அதுதான் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
ப்ளூ ஸ்டார் படத்தில் சுசிலா கதாபாத்திரத்தில் லிச்சி ஆண்டனி சிறப்பாக நடித்திருந்தார். பலரும் அவரது கதாபாத்திரத்தினை பாராட்டி வருகிறார்கள்.