ஷாருக்கான், அபிஷேக் பச்சன்
ஷாருக்கான், அபிஷேக் பச்சன்

ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன்! அமிதாப் பச்சன் பதிவு!

நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
Published on

நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ஷாருக்கானின் நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான், டன்கி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. தற்போது கிங் எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை சுஜோய் கோஷ் இயக்குகிறார். அதில் ஷாருக்கானின் மகளும் நடிக்கவிருக்கிறார். மேலும் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான், அபிஷேக் பச்சன்
ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? டாப்ஸி விளக்கம்!

ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவை அமிதாப் பச்சன் பகிர்ந்து, “ஆல் தி பெஸ்ட் அபிஷேக். இதுதான் சரியான நேரம்” எனக் கூறியுள்ளார். ரசிகர் பகிர்ந்த பதிவில், “அபிஷேக் சார் வில்லனாக நடிக்கும்போது அவரால் எவ்வளவு தரமான நடிப்பை தர முடியுமென அவரின் பிரீத் இன் டூ த ஷேடோவ், ராவணன், பிபி பார்த்தவர்களுக்கு தெரியும். எப்போதும் அவரை குறைவாக மதிப்பிடாதீர்கள்” எனக் கூறுவார்.

ஷாருக்கான், அபிஷேக் பச்சன்
நிவேதா தாமஸின் கதாபாத்திர அறிமுகம்!

இந்தப் படத்தினை பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தயாரிக்க உள்ளார். 2014இல் வெளியான ஹேப்பி நியூ இயர் படத்தில் ஏற்கனவே அபிஷேக் பச்சன், ஷாருக்கானுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகப்பெரிய கமர்சியல் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. இந்தக் கூட்டணி அமைந்தால் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கமெண்டுக்களில் கூறிவருகிறார்கள்.

அமிதாப் பச்சன் கல்கி 2898 ஏடி படத்தில் கலக்கி இருந்தார். அபிஷேக் பச்சன் கடைசியாக பால்கி இயக்கத்தில் கூமெர் படத்தில் நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com