எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்த, நடிகை ஹரிபிரியா இசை புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு முன்பே, சில இணைய நகைச்சுவைத் தொடர்களில் நடித்திருந்த நிலையில், எதிரீச்சல் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் ஹரிபிரியா இசை நடித்திருந்தார். நகைச்சுவை, நக்கல் கலந்த அவரின் பாத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
எதிர்நீச்சலில் கொடூர வில்லனாக வரும் ஆதி குணசேகரனை கண்டு அனைவரும் நடுங்கும்போது, நந்தினி அவரையும் நக்கல் செய்து நகர்ந்து செல்வார். இதனால், நந்தினி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

எதிர்நீச்சல் தொடரில் ஹரிபிரியா இசை - ட்விட்டர்
ஆதி குணசேகரன் வீட்டில் இருக்கும் 4 மருமகள்களில் மற்ற மூவரை விஞ்சி, தனித்துவமாகவும் நந்தினி பாத்திரம் இருந்தது. அதில் ஹரிபிரியா இசை நடிப்புக்கு பல விருதுகளும் கிடைத்தது.
சின்னத்திரைக்கு வழங்கப்படும் விருதுகளில் சிறந்த துணை நடிகை, சிறந்த நகைச்சுவை ஆகிய பிரிவுகளில் ஹரிபிரியா இசை விருது பெற்றுள்ளார். இது எதிர்நீச்சலில் நந்தினியாக அவர் நடித்ததற்கு கிடைத்த அங்கீகாரங்கள் எனலாம்.
எதிர்நீச்சல் தொடர் முடிந்த பிறகு, வீட்டில் அமராமல், சொந்தமாக நடனப் பள்ளியை ஆரமித்து, அதன்மூலம் வருவாய் ஈட்டி வந்தார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என சீரியலில் மட்டும் பேசாமல், நிஜ வாழ்க்கையிலும் அதன்படி வாழ்ந்து வரும் ஹரிபிரியாவுக்கு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹரிபிரியாவும், அவர் ஒப்பந்தமாகியுள்ள வருணன் பட போஸ்டரும்
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கும் வருணன் படத்தில் ஹரிபிரியா ஒப்பந்தமாகியுள்ளார். யாக்கை பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
ஹரிபிரியாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தாய்லாந்து சென்ற எதிர்நீச்சல் நடிகை ஹரிபிரியா இசை!

எதிர்நீச்சல் - 2 தொடரில் மாற்றம்! அறிமுகமாகும் புதிய வில்லன்!

எதிர்நீச்சல் - 2 தொடர்: புதிய ஈஸ்வரி இவரா?
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



