மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியான 6 தமிழ் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூலை 2024, 4:01 pm IST

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகியுள்ளது.

நாசர், தலைவாசல் விஜய் , வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் திரில்லர் படமாக வெளியான தி அக்காலி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வை மையமாககொண்டு விதார்த், வாணி போஜன் நடிப்பில் வெளியான அஞ்சாமை திரைப்படம் சிம்பிளி செளத் தளத்தில் வெளியாகியுள்ளது.

புதுமுகங்கள் நடிப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ரயில். இப்படம் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் குறித்து எடுக்கப்பட்டது. ரயில் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆர்கே சுரேஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான காடுவெட்டி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

விதார்த்தின் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.