
நடிகர் சூர்யாவுக்கு அவரது தம்பி நடிகர் கார்த்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா 1997-ல் நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அப்படத்தில் விமர்சனங்களைச் சந்தித்தாலும் 2001-ல் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் நாயகனாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சூர்யா, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். தற்போது, கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தன் 49-வது பிறந்த நாளை நடிகர் சூர்யா கொண்டாடுகிறார். இதனால், சூர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி, “ஈடுபாடும் கடின உழைப்பும் இருந்தால் பூஜ்யத்திலிருந்துகூட துவங்கி எதையும் கற்று சாதிக்கலாம் என எனக்கு கற்றுத்தந்தவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சமூகத்தில் அதிக அன்புகளைப் பரப்பும் அன்பான ரசிகர்களுக்கு என் அன்புகள்” எனப் பதிவிட்டு அண்ணனுடனான தன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் தம்பி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.