பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டிமான்ட்டி காலனி - 2 வெளியீட்டுத் தேதி!

Published On :

டிமான்டி காலனி - 2 வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

Story image

மேலும், இப்படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வெளியீடு குறித்த தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், டிமான்டி காலனி - 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.