
சிம்புதேவன் இயக்கத்தில் உருவான போட் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
இம்சை அரசன் 23-ம் புலிகேசி', அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன்.
இவரது இயக்கத்தில் வெளியான 'கசடதபற' படம் சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது. தற்போது, இவர் இயக்கியுள்ள படம் 'போட்'.
மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் யோகி பாபு, கெளரி கிஷன், எம்எஸ் பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வரும் ஆக. 2 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.