மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மறுவெளியீட்டில் கில்லி வசூலை முறியடிக்க திணறும் தமிழ்ப் படங்கள்!

மறுவெளியீட்டில் இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கில்லி படத்தின் வசூலை முறியடிக்கவில்லை.

Published On :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு முன்பு இந்தியன் முதல் பாகத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்துள்ளனர். இதனை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியன் படம் ரீ ரிலீஸில் முதல் நாளில் ரூ.1 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விஜய் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் முதல்நாளில் ரூ,10 கோடி வசூலித்தது. கில்லி படத்தின் சாதனயை அஜித் படங்கள்கூட முறியடிக்கவில்லை.

தற்போது கமலின் இந்தியன் படமும் இந்தச் சாதனையை முறியடிக்க திணறுகிறது குறிப்பிடத்தக்கது. கில்லி திரைப்படம் இன்றோடு 50ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.