புஷ்பா - 2 வெளியீட்டுத் தேதி மாற்றம்!
புஷ்பா - 2 படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.


புஷ்பா - 2 படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும், சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் அதிர்ந்தது.
முன்னதாக, புஷ்பா - 2 படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. மேலும், இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புஷ்பா - 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடையாத காரணத்தினால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...