இயக்குநர் பேரரசுவை கிண்டல் செய்த வெற்றிமாறன்!

கள்வன் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதை மறுத்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றி மாறன்.
இயக்குநர் பேரரசுவை கிண்டல் செய்த வெற்றிமாறன்!

கள்வன் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதை மறுத்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றி மாறன்.

இசை நடிப்பு என இரண்டிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் ஜி.வி. பிரகாஷ்குமார். அவர் கடைசியாக நடித்த அடியே திரைப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அடுத்ததாக, இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜிவி பிரகாஷ்குமார், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ள கள்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் பேரரசுவை கிண்டல் செய்த வெற்றிமாறன்!
ஓடிடியில் லவ்வர்!

யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் டில்லிபாபு தயாரித்துள்ளார்.

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ஏப்ரல் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழாவில், “கும்கி மிகபெரிய வெற்றி படமாக அமைந்தது. யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். நல்ல நேரம் மாதிரி, அன்னையோர் ஆலயம் மாதிரி, கும்கி மாதிரி இந்த கள்வன் படமும் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும். இயக்குநர், நாயகன், நாயகி என அனைவரும் நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும்” எனக் கூறினார்.

இயக்குநர் பேரரசுவை கிண்டல் செய்த வெற்றிமாறன்!
மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!

இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன்,”யானையை வைத்து எடுத்தாலும் டைனோசரை வைத்து எடுத்தாலும் திரைக்கதையும் கதையும் நன்றாக இருந்தால் மட்டுமே படம் ஓடும்” எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com