மதுராந்தகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முதல்வர் விஜய் பிரசாரம் தொடக்கம்!வண்டலூர் பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! தாம்பரம் காவல்துறை விளக்கம்தவெக ஆட்சியில் பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு! மேயர் பிரியா உரைஞானேஷ் குமாருக்கு எதிராக அக். 2 முதல் போராட்டம்! அபிஜித் தீப்கே அறிவிப்பு!பள்ளியில் மாணவிக்கு கூட்டு வல்லுறவு! வசனம் பேசிய முதல்வர் எங்கே? உதயநிதி கேள்வி!இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறைஜெம் வீரமணி வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவு

விஜய்யின் கடைசி பட இயக்குநர் இவரா?

நடிகர் விஜய்யின் 69-வது படத்தின் இயக்குநர் உறுதியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் - 69 படத்துடன் அவர் சினிமாவிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. விஜய்யின் கடைசி படமென்பதால், இதை யார் இயக்குவார் என்கிற கேள்விக்கு தற்போது புதிய விடை கிடைத்துள்ளது.

தகவலின்படி, விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார்.

நடிகர் கமல்ஹாசன் - வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.