/

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

நடிகர் சத்யராஜ் இடம்பெற்றுள்ள இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

News image
Updated On :8 மே 2024, 10:47 am

DIN

நடிகர் சத்யராஜ் தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமானவர், நாயகனாகி வெற்றி பெற்றார். இவர் கதை நாயகனாக நடித்த வேதம் புதிது, அமைதிப்படை, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தன.

தற்போது, முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சத்யராஜ் ஒரு குழந்தையுடன் இருக்கும் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்தக் குழந்தை யார் தெரியுமா? நடிகர் ஃபஹத் ஃபாசில்!

Story image

1987 ஆம் ஆண்டு சத்யராஜ், கார்த்திகா, ரகுவரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘பூவிழி வாசலிலே’ திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தை இயக்கியது இயக்குநர் ஃபாசில். இவர் ஃபஹத் ஃபாசிலின் தந்தை. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, சத்யராஜுடன், ஃபஹத் எடுத்துக்கொண்ட புகைப்படமாம் இது!

சமீபத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.