தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 மே 2024, 11:01 am IST

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகுமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தன் 44-வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்தது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஊட்டி மற்றும் சில இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.