அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா?

அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா?

நடிகர் அஜித் குமாரின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Published on

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இதில், அஜித் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா?
தங்களைக் கடவுளின் படைப்பு என நினைப்பவர்களுக்கு சிகிச்சை தேவை: பாடகர் ஸ்ரீனிவாஸ்!

இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது குட் பேட் அக்லியில் நடிகை நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாக, விஸ்வாசம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மீண்டும் இக்கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்துக்கு ஜோடியாகும் நயன்தாரா?
குட் பேட் அக்லி - ஓடிடி உரிமத் தொகை இவ்வளவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com