
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி போட்டியாளராக பங்கேற்கவுள்ளார்.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி 3 வாரங்கள் முடிந்த நிலையில், 4வது வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளராக மஞ்சரி நுழையவுள்ளார். அதோடு மட்டுமின்றி இம்முறை வைல்டு கார்டு முறையில் 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் மிகுந்த பொருள்செலவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இதுவாகும்.
பிக் பாஸ் வீட்டில் 100 கேமராக்கள் மூலம் பிரபலங்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள், உண்மை முகம் இதில் காட்டப்படுவதால், இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகம்.
கடந்த 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் சீசன் 8-ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் தற்போது தொகுப்பாளருக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கியுள்ளனர் என சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கூடுதலாக 8 போட்டியாளர்கள்
இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினர்.
வாரம் ஒருவர் வெளியேறிவரும் நிலையில், வைல்டு கார்டு மூலம் கூடுதலாக 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இனி வரும் ஒவ்வொரு வாரமும் இருவர் வெளியேற்றப்படுவார்கள் என்ற விதியும் அமலாகும் எனத் தெரிகிறது. இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவராக பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி பிக் பாஸ் வீட்டிற்குச் செல்லவுள்ளார்.
யார் இந்த மஞ்சரி?
பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சரி, விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் கூட தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசியிருந்தார். சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.
இதையும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து விலகுகிறேனா? உண்மை உடைத்த ராஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.