தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இட்லி கடை படத்தின் அப்டேட்டினை வெளியிட்ட தனுஷ்!

தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இட்லி கடை படத்தின் அப்டேட்டினை வெளியிட்ட தனுஷ்.

Published On :7 நவம்பர் 2024, 6:34 pm IST

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.

இதற்கிடையே, தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இட்லி கடை எனும் படத்தினை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார்.

ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியானது.

இப்படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா, பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், நடிகர் தனுஷுடன் தேநீர் அருந்தும் புகைப்படத்தை நித்யா மெனன் (மேனன் அல்ல என பெயர் விளக்கம் சமீபத்தில் அளித்தார்) பகிர்ந்தது வைரலானது.

திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு தனுஷுடன் நித்யா மேனன் இணைவதால் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகுமெனக் கூறியுள்ளார்.

ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பா அல்லது பாடல் எதுவுமா என்பது நாளைதான் தெரியவரும்.

இந்தப்படம் அடுத்தாண்டு கோடைவிடுமுறைக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.